தமிழ் பரீட்சி யின் அர்த்தம்

பரீட்சி

வினைச்சொல்பரீட்சிக்க, பரீட்சித்து

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு சோதித்தல்; பரிசோதனை செய்தல்.

    ‘மருத்துவர் நோயாளியின் நாடியைப் பரீட்சித்துப்பார்த்தார்’
    ‘என் திறமைமீது சந்தேகம் இருந்தால் பரீட்சித்துப்பாருங்கள்’