தமிழ் பரந்த யின் அர்த்தம்

பரந்த

பெயரடை

 • 1

  பெரும் பரப்புடைய; விசாலமான.

  ‘பரந்த பாலைவனம்’
  ‘அவனுடைய பரந்த மார்பில் குழந்தை படுத்துக்கிடந்தது’

 • 2

  (பார்வை, அறிவு போன்றவற்றைக் குறிக்கும்போது) குறுகிய எல்லைக்குள் அடங்கிவிடாமல் விரிவாகவும் பலவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்வதாகவும் உள்ள; விரிவான.

  ‘பள்ளிக்கூடத்திற்காகத் தன் நிலம் முழுவதையும் எழுதி வைத்த அவருடைய பரந்த நோக்கத்தைப் பாராட்ட வேண்டும்’
  ‘எல்லோருக்கும் உதவி செய்யும் பரந்த மனம் படைத்தவர்’
  ‘பரந்த அறிவு’
  ‘பரந்த கண்ணோட்டம்’
  ‘பரந்த மனப்பான்மை’