தமிழ் பரவு யின் அர்த்தம்

பரவு

வினைச்சொல்பரவ, பரவி

 • 1

  (திரவம், வாயு முதலியவை) ஒரு இடத்திலிருந்து சுற்றியிருக்கும் பகுதிக்குப் படர்தல்.

  ‘சட்டையில் பட்ட மை பரவிப் பெரிய கறையாகிவிட்டது’
  ‘ஒரு குடிசையில் பற்றிய தீ மற்ற குடிசைகளுக்கும் பரவியது’
  ‘அம்மை உடம்பு முழுவதும் பரவிவிட்டது’

 • 2

  (தகவல், புகழ் போன்றவை பலரை) பரவலாகச் சென்றடைதல்.

  ‘இனக் கலவரத்தின்போது வதந்திகளைப் பரவவிடாமல் தடுக்க வேண்டியது நம் கடமை’
  ‘இரண்டாவது நாவலுக்குப் பிறகுதான் அவரது புகழ் மெல்லமெல்லப் பரவ ஆரம்பித்தது’

 • 3

  (வெளிச்சம், இருள் ஆகியவை) சிறிதுசிறிதாக அதிகமாகிப் படர்தல்.

  ‘சூரியன் மறையத் தொடங்கியதும் காட்டில் இருள் பரவத் தொடங்கியது’

 • 4

  (நோய்) ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குத் தொற்றுதல்; பாதித்தல்.

  ‘காலரா எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய்’

 • 5

  (பல இடங்களில்) பரந்திருத்தல்.

  ‘முகலாயரின் ஆட்சி தென் இந்தியாவரை பரவியிருந்தது’