தமிழ் பரிசோதி யின் அர்த்தம்

பரிசோதி

வினைச்சொல்பரிசோதிக்க, பரிசோதித்து

 • 1

  (ஒன்றின் தன்மை, செயல்பாடு போன்றவற்றைக் கண்டறிவதற்காகத் தகுந்த கருவிகளை, வழிமுறைகளைக் கொண்டு) ஆய்வு செய்தல்; ஆராய்ந்து பார்த்தல்; சோதனை செய்தல்.

  ‘என்னைப் பரிசோதித்த மருத்துவர் ‘பயப்படும்படியாக ஒன்றுமில்லை’ என்று கூறிவிட்டார்’
  ‘இரத்தத்தைப் பரிசோதித்துப் பார்த்ததில் சர்க்கரை நோய் இருப்பது தெரியவந்தது’
  ‘புதிய மருந்துகளைக் கண்டுபிடித்தால் முதலில் விலங்குகளுக்குக் கொடுத்துப் பரிசோதிப்பார்கள்’
  ‘போலீஸ்காரர் ஒவ்வொரு பெட்டியாகப் பரிசோதித்துக்கொண்டு வந்தார்’