தமிழ் பரிணமி யின் அர்த்தம்

பரிணமி

வினைச்சொல்பரிணமிக்க, பரிணமித்து

 • 1

  (ஒன்று மற்றொன்றாக) படிப்படியாக வளர்ச்சி அடைதல்; படிப்படியான மாற்றத்தின் மூலம் ஒரு நிலையிலிருந்து வேறொரு நிலையை அடைதல்.

  ‘நாடகக் கலைஞராக வாழ்க்கையைத் தொடங்கித் திரைப்பட நடிகராகப் பரிணமித்தவர் இவர்’
  ‘நாட்டுப்புறக் கலையிலிருந்து பரிணமித்த ஆட்டம் இது’

 • 2

  அருகிவரும் வழக்கு சிறப்பாக விளங்குதல்.

  ‘நாட்டியக் கலை பரிணமிக்க மக்கள் ஆதரவு தேவை’