தமிழ் பரிந்துரை யின் அர்த்தம்

பரிந்துரை

வினைச்சொல்பரிந்துரைக்க, பரிந்துரைத்து

 • 1

  ஒன்றைச் செய்யலாம், செயல்படுத்தலாம், ஏற்றுக்கொள்ளலாம் என்று ஒருவர் தனது கருத்தையோ ஆலோசனையையோ முன்வைத்தல்; சிபாரிசு செய்தல்.

  ‘பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்த சம்பள விகிதங்களைப் பல்கலைக்கழகங்கள் ஏற்றன’
  ‘மாணவர்கள் படிக்க வேண்டிய நல்ல புத்தகங்களை ஆசிரியர்கள் பரிந்துரைக்க வேண்டும்’

தமிழ் பரிந்துரை யின் அர்த்தம்

பரிந்துரை

பெயர்ச்சொல்

 • 1

  ஒன்றைச் செய்யலாம், செயல்படுத்தலாம், ஏற்றுக்கொள்ளலாம் என்று ஒருவர் முன்வைக்கும் கருத்து அல்லது ஆலோசனை; சிபாரிசு.

  ‘புதிய கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்கலாம் என நிபுணர் குழு பரிந்துரை செய்தது’
  ‘அமைச்சரிடமிருந்து பரிந்துரைக் கடிதம் பெற முயன்றான்’
  ‘எழுத்தாளர் சுஜாதாவின் பரிந்துரையின் பேரில் புதுமைப்பித்தன் கதைகளைப் படித்தேன்’