தமிழ் பருவம் யின் அர்த்தம்

பருவம்

பெயர்ச்சொல்

 • 1

  (ஒருவர் அல்லது ஒன்று) தோன்றியதிலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திற்குமான வளர்ச்சி நிலை.

  ‘குழந்தைப் பருவத்திலிருந்தே அவன் என்னுடைய நண்பன்’
  ‘கொசுக்களை அவற்றின் முட்டைப் பருவத்திலேயே ஒழிக்க வேண்டும்’
  ‘பருத்தி வெடிக்கும் பருவம்’
  ‘குழந்தைப் பருவம்’
  ‘விடலைப் பருவம்’

 • 2

  (பெண்) கருத்தரிப்பதற்கு ஏற்ற உடல் வளர்ச்சியை அடையும் கட்டம்.

  ‘பருவத்துக்கு வந்த பெண்’
  ‘பருவப் பெண்கள்’

 • 3

  (விவசாயம் செய்வதற்கு) உரிய காலம்.

  ‘பருவத்தில் விதைத்தால் நல்ல விளைச்சலைப் பார்க்கலாம்’
  ‘ஆற்றில் பருவம் தவறித் தண்ணீர் திறக்கிறார்கள்’
  ‘இப்படிப் பருவம் தவறி மழை பெய்தால் எப்படி விவசாயம் செய்வது?’

 • 4

  (புராணம், இதிகாசம் போன்றவற்றில்) காண்டம் போன்ற பெரும் பகுதி.

  ‘மகாபாரதத்தில் ஆதிபருவம் முதலாவதாக அமைந்துள்ளது’
  ‘விராட பருவம்’