தமிழ் பற்றாக்குறை யின் அர்த்தம்

பற்றாக்குறை

பெயர்ச்சொல்

 • 1

  தேவைக்கும் குறைவாக இருக்கும் அல்லது கிடைக்கும் நிலை; தட்டுப்பாடு.

  ‘வறட்சியினால் தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது’
  ‘மின்சாரப் பற்றாக்குறை’
  ‘ஆட்கள் பற்றாக்குறையினால் பாலம் கட்டும் வேலை பாதியிலேயே நிற்கிறது’

 • 2

  வரவைவிட அல்லது கையிருப்பைவிடச் செலவு அதிகமாக இருப்பதால் ஏற்படும் பணக்குறைவு.

  ‘இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்படும் பற்றாக்குறையைச் சரிக்கட்டப் புதிய வரிகள் போடப்படலாம்’
  ‘அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை’