பல -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பல1பல2

பல1

வினைச்சொல்பலக்க, பலத்து

 • 1

  (மழை, காற்று போன்றவை) வலுத்தல்; அதிகமாதல்.

  ‘மழை பலத்துப் பெய்யத் தொடங்கியது’
  ‘காற்று பலக்க வீசியது’

 • 2

  (சத்தம்) அதிகமாதல்/(பேச்சு) தீவிரம் அடைதல்.

  ‘குழந்தையின் அழுகை பலத்தது’
  ‘வாக்குவாதம் பலத்துச் சண்டையில் முடிந்தது’
  ‘எல்லோரும் பலக்கக் கைதட்டினார்கள்’
  ‘பலக்கச் சிரித்தான்’

உச்சரிப்பு

பல

/(b-)/

பல -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பல1பல2

பல்2

பெயர்ச்சொல்

 • 1

  (வாயில் உணவைக் கடித்து மெல்லுவதற்கு ஏற்ற வகையில் இரு தாடைகளிலும் வரிசையாக அமைந்திருக்கும்) தட்டையான அல்லது கூரிய முனை கொண்ட உறுதியான வெண்ணிற உறுப்பு.

  ‘கீழே விழுந்ததில் இரண்டு முன் பற்கள் உடைந்துவிட்டன’
  ‘குழந்தைக்கு இப்போதுதான் பல் முளைக்க ஆரம்பித்திருக்கிறது’

 • 2

  (சீப்பு, இயந்திரச் சக்கரம் அல்லது ரம்பம் போன்றவற்றில் இடைவெளியுடன் அமைந்திருக்கும்) கூரிய முனை கொண்ட சிறு பகுதி.

  ‘பல் தேய்ந்துபோன இந்த ரம்பத்தை வைத்துக்கொண்டு எதையும் அறுக்க முடியாது’
  ‘சீப்பின் பற்கள் உடைந்துவிட்டன’

 • 3

  (வெள்ளைப்பூண்டின்) தனித்தனியான (பல் போன்ற) பகுதி.

  ‘குழம்புக்குப் பூண்டு பல் இரண்டு தட்டிப்போடு’

பல -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பல1பல2

பல

பெயர்ச்சொல்

 • 1

  எண்ணிக்கையில் அதிகம்.

  ‘அவருடைய கதைகளில் பலவற்றை நான் படித்திருக்கிறேன்’

 • 2

  (பெயரடையாக வரும்போது) எண்ணிக்கையில் அதிகமான.

  ‘போட்டியில் பல நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்டன’
  ‘இன்று தமிழ்நாட்டின் பல இடங்களில் மழை பெய்துள்ளது’

பல -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பல1பல2

பல்

பெயரடை

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு பல.

  ‘பல்லாண்டு’
  ‘பல்வகை மொழிகள்’