தமிழ் பல்டி அடி யின் அர்த்தம்

பல்டி அடி

வினைச்சொல்அடிக்க, அடித்து

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு நின்ற நிலையிலிருந்து துள்ளிக் கைகளைத் தரையில் ஊன்றி, உடலைத் தலைக்கு மேலாகத் தூக்கிப் போட்டு விழுதல்.

 • 2

  பேச்சு வழக்கு முதலில் ஒப்புக்கொண்டதைச் செய்யாமல் பின்வாங்குதல்; முதலில் சொன்னதற்கு மாறான ஒன்றைச் சொல்லுதல்.

  ‘எங்களுடன் ஊருக்கு வருவதாகச் சொல்லிவிட்டுக் கடைசி நேரத்தில் பல்டி அடிக்கிறாயே?’
  ‘இப்படி ஒரு திட்டத்தை நாங்கள் சொல்லவே இல்லை என்று ஆளும் கட்சி பல்டி அடித்தது’

 • 3

  பேச்சு வழக்கு (தேர்வில்) தோல்வியடைதல்.

  ‘இந்தத் தடவையும் பரீட்சையில் பல்டி அடித்துவிட்டாயா?’