தமிழ் பல்லிளி யின் அர்த்தம்

பல்லிளி

வினைச்சொல்-இளிக்க, -இளித்து

 • 1

  (பிறருடைய தயவை வேண்டும்போது) தன் மதிப்பு இழந்து தாழ்ந்து நடந்துகொள்ளுதல்/(மற்றவர் நோக்கில்) அசட்டுத்தனம் வெளிப்படச் சிரித்தல்.

  ‘உனக்காக நான் யாரிடமும் போய்ப் பல்லிளித்துக்கொண்டு நிற்க மாட்டேன்’
  ‘கடன் வாங்க வேண்டும் என்றால் மட்டும் பல்லிளித்துக்கொண்டு வந்துவிடுவாயே?’

தமிழ் பல்லிளி யின் அர்த்தம்

பல்லிளி

வினைச்சொல்-இளிக்க, -இளித்து

 • 1

  (வெளிப்பூச்சால் மறைக்கப்பட்டிருந்த நகை, பாத்திரம் முதலியவற்றின் பூச்சு நீங்கி அவற்றின்) மோசமான தன்மை அல்லது தரம் தெரியவருதல்.

  ‘வெள்ளி முலாம் பூசப்பட்ட கொலுசு பல்லிளித்துவிட்டது’
  உரு வழக்கு ‘நதிநீர்ப் பிரச்சினை என்று வரும்போது நமது தேசிய ஒருமைப்பாடு பல்லிளித்துவிடுகிறது என்று அவர் குற்றம்சாட்டினார்’