தமிழ் பல்லைக் காட்டு யின் அர்த்தம்

பல்லைக் காட்டு

வினைச்சொல்காட்ட, காட்டி

 • 1

  அர்த்தமற்ற அசட்டுச் சிரிப்புச் சிரித்தல்.

  ‘ஏன் இப்படிச் செய்தாய் என்று காரணம் சொல். சும்மா பல்லைக் காட்டாதே’

 • 2

  (மற்றவர் ஆசைகாட்டுவதால்) அதற்கு இணங்கித் தன் மதிப்பு குறையும் விதத்தில் நடந்துகொள்ளுதல்.

  ‘பணத்தைக் காட்டினால் பல்லைக் காட்டுகிற ஆசாமி அவன்’
  ‘அவன் கூப்பிட்டான் என்றதும் பல்லைக் காட்டிக்கொண்டு பின்னால் போய்விட்டாயா?’