தமிழ் பலவந்தம் யின் அர்த்தம்

பலவந்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வன்முறையைப் பயன்படுத்திச் செய்யும் முரட்டுத்தனமான நடவடிக்கை.

  ‘கையிலிருந்த பணத்தை பலவந்தமாகப் பிடுங்க முயன்றான்’
  ‘காவல்துறையினர் பலவந்தமாகத் தன்னை இழுத்துச் சென்றதாக எதிர்க்கட்சித் தலைவர் புகார் கூறினார்’

 • 2

  ஒன்றுக்கு இணங்க வைக்கும்படியான வற்புறுத்தல்; வலுக்கட்டாயம்; நிர்ப்பந்தம்.

  ‘நண்பர் என்னை பலவந்தமாகச் சாப்பிட வைத்துவிட்டார்’
  ‘வேண்டாம் என்று சொல்லியும் அப்பா பலவந்தமாகக் கையில் நூறு ரூபாயைத் திணித்தார்’