தமிழ் பலாத்காரம் யின் அர்த்தம்

பலாத்காரம்

பெயர்ச்சொல்

 • 1

  பலவந்தம்.

  ‘அநீதியை எதிர்த்துக் குரலெழுப்பும் மக்களின் வாயை பலாத்காரத்தால் மூடிவிட முடியுமா?’
  ‘பலாத்காரத்தால் எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது’
  ‘குடிசைவாழ் மக்களை பலாத்காரமாக வெளியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன’

 • 2

  கற்பழிப்பு.

  ‘அவன் பலாத்காரம் செய்ய முயன்ற குற்றத்துக்காகக் கைதுசெய்யப்பட்டான்’