தமிழ் பளிச்சென்று யின் அர்த்தம்

பளிச்சென்று

பெயரடை

 • 1

  பளிச்சென்று அமைந்த.

  ‘சுவர்களின் பளிச்சென்ற வெண்மை கண்களைக் கவர்ந்தது’

தமிழ் பளிச்சென்று யின் அர்த்தம்

பளிச்சென்று

வினையடை

 • 1

  கண்ணைப் பறிக்கிற வகையில் ஒளிர்ந்து.

  ‘மின்சாரம் வந்ததும் அனைத்து விளக்குகளும் பளிச்சென்று எரிந்தன’

 • 2

  (தோற்றத்தைக் குறிக்கும்போது) கண்ணைக் கவரும் வகையில் பொலிவுடன்.

  ‘பச்சைப் புடவையில் அவள் பளிச்சென்று இருந்தாள்’
  ‘சுண்ணாம்பு அடித்த பின்தான் வீடு பார்ப்பதற்குப் பளிச்சென்று இருக்கிறது’

 • 3

  தெளிவாகவும் சட்டென்றும்; உடனடியாக.

  ‘பிரச்சினையைத் தீர்க்க வழி தெரியாமல் குழம்பியவருக்குப் பளிச்சென்று ஒரு யோசனை தோன்றியது’
  ‘கேட்ட கேள்விகளுக்குச் சிறுவன் பளிச்சென்று பதில் சொன்னான்’