தமிழ் பழக்கவழக்கம் யின் அர்த்தம்

பழக்கவழக்கம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு பிரதேசம், மொழி, இனம் போன்றவற்றைச் சார்ந்தவர்களிடையே காணப்படும் பொதுவான இயல்புகள், நடைமுறைகள், பழக்கங்கள் போன்றவை.

    ‘ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியான பழக்கவழக்கங்கள் உள்ளன’
    ‘அவர் இந்தியாவுக்கு வந்த பிறகும் தன் பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ளவில்லை’
    ‘இந்த நூலில் மலைவாழ் மக்களின் உணவு, பழக்கவழக்கம், வழிபாட்டு முறை போன்றவற்றைப் பற்றி ஆசிரியர் விளக்குகிறார்’