தமிழ் பழக்கு யின் அர்த்தம்

பழக்கு

வினைச்சொல்பழக்க, பழக்கி

 • 1

  (ஒரு செயலைச் செய்ய) பயிற்சி அளித்தல்; பயிற்றுவித்தல்.

  ‘காய்கறி வாங்கப் பையனை நன்றாகப் பழக்கியிருக்கிறாய்’
  ‘மரங்களைத் தூக்க யானையைப் பழக்கியிருக்கிறார்கள்’
  ‘பந்தை எடுத்து வரும்படி நாயைப் பழக்கியிருக்கிறார்’

 • 2

  (ஒருவருக்கு அல்லது ஒன்றுக்குக் குறிப்பிட்ட ஒரு) பழக்கம் ஏற்படும்படி செய்தல்.

  ‘குழந்தையை எப்போதும் தூக்கிக்கொண்டுபோய்ப் பழக்கிவிட்டு, இப்போது நடக்கச் சொன்னால் அழுகிறான்’
  ‘குழந்தைக்கு காப்பி கொடுத்துப் பழக்காதே!’