தமிழ் பழித்துக்காட்டு யின் அர்த்தம்

பழித்துக்காட்டு

வினைச்சொல்-காட்ட, -காட்டி

  • 1

    (ஒருவரின் பேச்சு, நடை போன்றவற்றை) தரக்குறைவாகவும் கேலியாகவும் நடித்துக் காட்டுதல்.

    ‘தன் மாமியார் எப்படிப் பேசுவார் என்று மருமகள் பழித்துக்காட்டினாள்’

  • 2

    (ஒருவரை மதிக்காத விதத்தில் அல்லது தன் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில்) முகத்தைக் கோணுதல்; வலித்துக்காட்டுதல்.

    ‘அவன் அதட்டியவுடன் குழந்தை பழித்துக்காட்டிவிட்டு உள்ளே ஓடிவிட்டது’