தமிழ் பழைய யின் அர்த்தம்

பழைய

பெயரடை

 • 1

  (பயன்பாடு, செயல்பாடு, பழக்கம் போன்றவற்றில் ) வெகு நாட்களாக இருந்துவரும்; தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதால் புதியதாக இல்லாத.

  ‘நாங்கள் இருப்பது ரொம்பப் பழைய வீடு’
  ‘பழைய துணி’
  ‘பழைய கட்டடத்தை இடித்துக்கொண்டிருந்தார்கள்’
  ‘எங்கள் பழைய வீடு கிராமத்தில் இருக்கிறது’
  ‘அவர் எனது பழைய நண்பர்’
  ‘எனது பழைய முகவரிக்கு இப்போதும் கடிதங்கள் சென்றுகொண்டிருக்கின்றன’
  ‘பழைய திரைப்படப் பாடல்களுக்குப் புது மவுசு வந்திருக்கிறது’
  ‘பழைய வேலைக்காரியையே மீண்டும் வேலைக்கு வரச் சொல்லலாம்’