தமிழ் பாட்டுக்கு யின் அர்த்தம்

பாட்டுக்கு

இடைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு ‘பிறரால் அல்லது பிறவற்றால் பாதிக்கப்படாமல் தன் போக்கில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

    ‘யார் பேசுவதையும் கவனிக்காமல் அவன் பாட்டுக்குப் போய்விட்டான்’
    ‘பேச வேண்டாம் என்று சொல்லியும் நீ பாட்டுக்குப் பேசிக்கொண்டே போகிறாயே!’
    ‘யார் வந்தால் என்ன, வராவிட்டால் என்ன? வேலை பாட்டுக்கு நடக்கும்’