தமிழ் பாடம் யின் அர்த்தம்

பாடம்

பெயர்ச்சொல்

 • 1

  மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் பல துறைகளில் ஒன்று.

  ‘கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய மூன்று பாடங்களிலும் இருநூறுக்கு இருநூறு எடுத்த மாணவர் இவர்தான்’
  ‘சமஸ்கிருதத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்திருக்கிறேன்’

 • 2

  பாடநூலின் உட்பிரிவு.

  ‘இந்தப் பாடநூலில் மொத்தம் இருபது பாடங்கள் உள்ளன’

 • 3

  (காவியம், நாடகம், செய்யுள் போன்றவற்றின்) எழுத்துப் பிரதி.

  ‘நாட்டுப்புறக் கலைகளுக்கு மரபு ரீதியான பாடம் என்பது கிடையாது’
  ‘நான் கற்றுக்கொண்ட பாடத்தில் நீங்கள் சொல்லும் தகவல் இல்லை’

 • 4

  (வரலாறு, நிகழ்ச்சி, அனுபவம் போன்றவற்றிலிருந்து ஒருவர்) எதைச் செய்ய வேண்டும் அல்லது எதைச் செய்யக் கூடாது என்று கற்றுக்கொள்வது; படிப்பினை.

  ‘அவருடைய தியாக வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு பாடம்’

 • 5

  மனப்பாடம்.

  ‘குறள் முழுவதும் அவருக்குப் பாடம்’

தமிழ் பாடம் யின் அர்த்தம்

பாடம்

பெயர்ச்சொல்

 • 1

  (மனித உடல், விலங்கின் தோல், புகையிலை முதலியவை) கெட்டுப்போகாமல் நீண்ட நாள் இருக்க வேதிப்பொருள்களைப் பயன்படுத்திப் பாதுகாக்கும் முறை.

  ‘பல வகை விலங்குகள் பாடம் செய்யப்பட்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன’