பாணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாணி1பாணி2

பாணி1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்று தலைமுறைதலைமுறையாகக் கடைப்பிடிக்கப்பட்ட முறையின் காரணத்தாலோ அல்லது மற்றவற்றிலிருந்து குறிப்பிட்ட விதத்தில் அடையாளம் காணக் கூடியதாக இருக்கும் காரணத்தாலோ உணரப்படும்) தனித்தன்மை.

  ‘மேற்கத்திய பாணியில் உடை அணிந்திருந்தாள்’
  ‘கேரள பாணியில் கட்டப்பட்ட வீடு’
  ‘சிறுகதை இலக்கியத்தில் ஒரு புதிய பாணியை வகுத்துக்கொண்டவர்’
  ‘அவன் சிரிக்கும் பாணியே தனி’

பாணி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாணி1பாணி2

பாணி2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு காய்ச்சிய பதநீர்.

  ‘பனம் பாணி’

 • 2

  இலங்கைத் தமிழ் வழக்கு பாகு.

  ‘சீனிப் பாணி’