தமிழ் பாதகம் யின் அர்த்தம்

பாதகம்

பெயர்ச்சொல்

  • 1

    கெடுதல்; சாதகமாக இல்லாதது; பாதிப்பு.

    ‘பங்குச் சந்தைக் குறியீட்டெண்ணின் திடீர் ஏற்றம் சில சமயம் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது’
    ‘சுற்றுச்சூழலுக்குப் பாதகம் ஏற்படுத்தாத வகையில் தொழிற்சாலைகள் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்’
    ‘உனக்கு நான் என்ன பாதகம் செய்தேன்?’