பாதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாதம்1பாதம்2

பாதம்1

பெயர்ச்சொல்

 • 1

  (கணுக்காலுக்குக் கீழ் உள்ள) காலின் கீழ்ப்பகுதி.

  ‘பாதத்தில் சலங்கை கட்டியிருந்தாள்’

 • 2

  உள்ளங்கால்.

 • 3

  (மணை போன்ற சாதனங்களை நிறுத்திவைக்கப் பயன்படும்) கால் போன்ற பகுதி.

  ‘வெண்கலக் கும்பாவின் பாதம் உடைந்துவிட்டது’

 • 4

  சமூக வழக்கு
  தென்கலை வைணவர்கள் அணியும் நாமத்தின் கீழ்ப் பகுதியில் இருக்கும் கோடு.

பாதம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாதம்1பாதம்2

பாதம்2

பெயர்ச்சொல்

சோதிடம்
 • 1

  சோதிடம்
  குறிப்பிட்ட நட்சத்திரத்தின் காலத்தில் நான்கில் ஒரு பகுதி.

  ‘மூலம் கடைசிப் பாதம் என்றால் அவ்வளவு தீய பலன்கள் இருக்காது’