பாதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாதி1பாதி2

பாதி1

வினைச்சொல்பாதிக்க, பாதித்து

 • 1

  இயல்பான தன்மைக்கு அல்லது நிலைக்குக் கேடு அல்லது தடை விளைவித்தல்.

  ‘அதிக அளவில் இடப்படும் ரசாயன உரம் மண் வளத்தைப் பாதிக்கும்’
  ‘தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள்’
  ‘ஊர்வலத்தினால் போக்குவரத்துப் பாதிக்கப்படவில்லை’

 • 2

  (ஒருவருடைய மனத்தில் அல்லது இயல்பில்) மாற்றம், தாக்கம், பாதிப்பு போன்றவற்றை ஏற்படுத்துதல்.

  ‘மனைவியின் பிரிவு அவரை மிகவும் பாதித்தது’
  ‘மனத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள்’
  ‘வறுமையைப் பற்றி அவர் எழுதியிருந்தது என்னை மிகவும் பாதித்துவிட்டது’
  ‘சத்யஜித் ராய்தான் என்னை மிகவும் பாதித்த இந்திய இயக்குநர்’

பாதி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாதி1பாதி2

பாதி2

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு பொருளின் அளவை அல்லது ஒரு எண்ணிக்கையை சரிசமமாய்ப் பிரிக்கும்போது கிடைக்கும் ஒரு பகுதி.

  ‘பழத்தில் பாதி கொடு’
  ‘பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் இருந்தது’
  ‘பெரியவரிடம் பேசிக்கொண்டிருந்ததில் மனப்பாரம் பாதி குறைந்ததுபோல் இருந்தது’
  ‘மகன் வேலைக்குப் போக ஆரம்பித்த பிறகு பாதிக் குடும்பக் கஷ்டம் தீர்ந்தது’

 • 2

  (நிகழ்ந்துகொண்டிருக்கும் செயல்) முற்றுப்பெறாத நிலை.

  ‘மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது’
  ‘படிப்பைப் பாதியில் நிறுத்தாதே’