தமிழ் பாதுகாப்பு யின் அர்த்தம்

பாதுகாப்பு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தீங்கு, அழிவு, சேதம் போன்றவை நேராமல் தடுக்கும் காவல் அல்லது கண்காணிப்பு.

  ‘தொடர்ந்து திருட்டுகள் நடந்துவரும் குடியிருப்புப் பகுதிகளில் இப்போது பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது’
  ‘நாட்டின் பாதுகாப்புக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கும் இராணுவத்தினர்’
  ‘அழிந்துவரும் நிலையிலுள்ள வன விலங்குகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது’
  ‘நுகர்வோர் நலப் பாதுகாப்புச் சங்கம்’
  ‘பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக்கொண்டு போ’
  ‘பணத்தைப் பாதுகாப்பான இடத்தில் வை’

 • 2

  (ஒருவர் உணரும்) பத்திரமான நிலை.

  ‘பெற்றோர்களுடன் இருந்தபோது உணர்ந்த பாதுகாப்பு இப்போது இல்லை’
  ‘நண்பர்கள் நிறைந்த சூழல் பாதுகாப்பாக இருந்தது’

 • 3

  பொறுப்போடு மேற்கொள்ளப்படும் கவனிப்பு.

  ‘குழந்தையை ஆயாவின் பாதுகாப்பில் விட்டுவிட்டு வேலைக்குப் போகிறோம்’