தமிழ் பாதை யின் அர்த்தம்

பாதை

பெயர்ச்சொல்

 • 1

  (ஓர் இடத்துக்கு) செல்வதற்கு உரிய வழி.

  ‘வளைந்துவளைந்து செல்லும் மலைப் பாதை’
  ‘மழை பெய்தால் இந்தப் பாதையில் நடக்க முடியாது’
  ‘சுரங்கத்திற்குச் செல்லும் ரகசியப் பாதை’
  உரு வழக்கு ‘‘ நீ போகும் பாதை சரியில்லை’ என்று அவர் எச்சரித்தார்’
  உரு வழக்கு ‘நாடு முன்னேற்றப் பாதையில் செல்கிறது’

 • 2

  உடலுக்குள் இரத்தம், சுவாசம், உணவு போன்றவை செல்லும் குழல்களில் அல்லது ஒரு குழாய் போன்றவற்றில் திரவங்கள், வாயு ஆகியவை செல்லும் வழி.

  ‘இரத்தம் செல்லும் பாதையில் அடைப்பு’
  ‘சுவாசப் பாதையில் கோளாறு’
  ‘எண்ணெய் செல்லும் இந்தக் குழாயின் பாதையில் அடைப்பு ஏற்பட்டிருக்கிறது’