பாத்திரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாத்திரம்1பாத்திரம்2

பாத்திரம்1

பெயர்ச்சொல்

 • 1

  (பொருள்களை வைத்தல், நீர் பிடித்துவைத்தல் போன்ற வீட்டு வேலைகளுக்குப் பயன்படும்) உலோகம், பீங்கான் முதலியவற்றால் ஆன கொள்கலன்.

  ‘வீட்டில் இருக்கும் பாத்திரத்திலெல்லாம் தண்ணீர் பிடித்து வைத்தான்’
  ‘காப்பி போடுவதற்காகப் பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்தாள்’
  ‘கண்ணாடிப் பாத்திரம்’

 • 2

  (அன்பு, நம்பிக்கை முதலியவற்றிற்கு) உரியவர்.

  ‘நாளடைவில் அவன் என் அன்புக்குப் பாத்திரம் ஆனான்’
  ‘நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த நண்பர்களிடம் தன் யோசனையைப் பற்றிக் கலந்து பேசினார்’

பாத்திரம் -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாத்திரம்1பாத்திரம்2

பாத்திரம்2

பெயர்ச்சொல்

 • 1

  (கதை, நாடகம் போன்றவற்றில் படைப்பாளியால்) குறிப்பிட்ட தன்மை, செயல்பாடு போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்படுபவர் அல்லது உருவாக்கப்படுவது; கதாபாத்திரம்.

  ‘இந்த நாவலின் மையப் பாத்திரம் ஒரு ஆசிரியர்’
  ‘கதாநாயகி பாத்திரம் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என்று அந்த நடிகை கூறிவிட்டார்’
  ‘அசோகமித்திரன் ‘தண்ணீர்’ என்ற நாவலில் தண்ணீரையும் ஒரு பாத்திரமாகப் படைத்திருக்கிறார்’