தமிழ் பாயும் படுக்கையுமாக யின் அர்த்தம்

பாயும் படுக்கையுமாக

வினையடை

  • 1

    படுக்கையை விட்டு எழுந்திருக்கக்கூட முடியாத அளவுக்கு நோய்வாய்ப்பட்டு; படுத்தபடுக்கையாக.

    ‘இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தினால் அவர் பாயும் படுக்கையுமாகக் கிடக்கிறார்’
    ‘பாட்டி ஆறு மாதமாகப் பாயும் படுக்கையுமாகக் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறாள்’