தமிழ் பால்குடி மற யின் அர்த்தம்

பால்குடி மற

வினைச்சொல்மறக்க, மறந்து

  • 1

    (குழந்தை, கன்றுக்குட்டி போன்றவை) தாய்ப்பால் குடிக்கும் பழக்கத்தை விடுதல்.

    ‘குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. இன்னும் பால்குடி மறக்கவில்லையா?’
    ‘பால்குடி மறக்காத கன்றுக்குட்டியை விற்றுவிட்டாயே!’