தமிழ் பால்மாறு யின் அர்த்தம்

பால்மாறு

வினைச்சொல்பால்மாற, பால்மாறி

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு வேலைசெய்யச் சுணங்குதல்; சோம்பல்படுதல்.

  ‘சின்ன வேலைதானே, பால்மாறாமல் செய்து முடித்துவிடலாம்’
  ‘பால் மாறிக்கொண்டிருந்தால் வேலையை எப்போது முடிப்பது?’

 • 2

  வட்டார வழக்கு (செய்வதாகச் சொல்லிவிட்டு) செய்யாமல் பின்வாங்குதல்; பேச்சு மாறுதல்.

  ‘பணம் தருவதாகச் சொன்னவன் கொஞ்ச நேரத்தில் பால்மாறிவிட்டான்’