பாவனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவனை1பாவனை2

பாவனை1

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைச் செய்யும் அல்லது வெளிப்படுத்தும்) தோரணை அல்லது தோற்றம்.

  ‘உண்மையைச் சொல்லிவிடு என்று எச்சரிக்கும் பாவனை அவன் முகத்தில் இருந்தது’
  ‘கையில் சிலம்புடன் சினம் பொங்க நிற்கும் பாவனையில் கண்ணகியின் சிலை அமைந்திருந்தது’
  ‘வெளிநாட்டுக்குப் போய்வந்த பிறகு அவருடைய நடை, உடை, பாவனைகள் அனைத்தும் மாறிவிட்டன’

 • 2

  இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அதற்கேற்ப நடந்துகொள்ளும் செயல்.

  ‘கையில் குழந்தை இருப்பதாக பாவனை செய்துகொண்டு நடித்தாள்’

 • 3

  பாசாங்கு.

  ‘நான் பேசுவதைக் கவனமாகக் கேட்பதுபோல் பாவனை செய்திருக்கிறான்’

பாவனை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவனை1பாவனை2

பாவனை2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு பயன்பாடு; உபயோகம்.

  ‘வீட்டுப் பாவனைக்கு ஏற்ற பொருள்கள்’
  ‘இந்தச் சொல் இப்போது பாவனையில் இல்லை’