பாவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவி1பாவி2பாவி3

பாவி1

வினைச்சொல்பாவிக்க, பாவித்து

 • 1

  (ஒன்றை அல்லது ஒருவரைக் குறிப்பிட்ட முறையில்) கருதுதல்.

  ‘கடிதத்தைத் தந்தியாக பாவித்து உடனே புறப்பட்டு வரவும்’
  ‘இறந்த நண்பரின் குடும்பத்தைத் தன் குடும்பமாக பாவித்து எல்லா உதவிகளும் செய்தார்’
  ‘அனைத்து மொழிகளையும் சமமாக பாவிக்க வேண்டும்’

உச்சரிப்பு

பாவி

/(b-)/

பாவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவி1பாவி2பாவி3

பாவி2

வினைச்சொல்பாவிக்க, பாவித்து

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) பயன்படுத்துதல்; உபயோகப்படுத்துதல்.

  ‘இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பாவிக்கலாம்’

பாவி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பாவி1பாவி2பாவி3

பாவி3

பெயர்ச்சொல்

 • 1

  பாவம் செய்தவர்.

  ‘பாவிகளையும் மன்னிக்கும் தேவன்!’

 • 2

  தற்போதைய இரங்கத் தக்க நிலைக்கு ஒருவரைக் காரணமாகக் காட்டிக் குறைகூறவோ திட்டவோ பயன்படுத்தும் சொல்.

  ‘பாவி! இப்படிக் குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டுப் போய்விட்டாயே’
  ‘‘ குடி கெடுக்க வந்த பாவி நீ!’ என்று திட்டினார்’