தமிழ் பிடித்தம் யின் அர்த்தம்

பிடித்தம்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (ஒருவருக்குச் சேர வேண்டிய தொகையில் குறிப்பிட்ட காரணங்களுக்காக) கழிக்கப்படும் தொகை.

  ‘பிடித்தமெல்லாம் போக உன் சம்பளம் எவ்வளவு?’

தமிழ் பிடித்தம் யின் அர்த்தம்

பிடித்தம்

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு விருப்பம்; பிரியம்.

  ‘உனக்குப் பிடித்தமான தொழிலைச் செய்ய யாரும் தடை சொல்லப் போவதில்லை’
  ‘அவருக்குக் காரச்சேவு என்றால் ரொம்பப் பிடித்தம்’