தமிழ் பிடிப்பு யின் அர்த்தம்

பிடிப்பு

பெயர்ச்சொல்

 • 1

  ஒரு நிலையில் ஆடாமல் அல்லது விழாமல் பிடித்துக்கொள்வதற்காக இருக்கும் ஒன்று; பிடி.

  ‘எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் கம்பத்தின் மேல் நின்று சுழன்று ஆடினாள்’
  ‘அலையில் படகு வேகமாக ஆடியதால் பிடிப்பு இல்லாமல் கடலில் விழுந்தான்’

 • 2

  ஒன்றை இறுக்கமாகப் பிடித்திருக்கும் அல்லது பற்றியிருக்கும் நிலை.

  ‘கைப்பிடியை அழுத்தும்போது இயந்திரத்தில் பிடிப்பு ஏற்பட்டு இயங்காமல் நின்றுவிடும்’

 • 3

  ஈடுபாடு; பற்று.

  ‘குடும்பத்தின் மேல் பிடிப்பே இல்லாமல் இருக்கிறான்’
  ‘கொள்கைப் பிடிப்பு இல்லாத தொண்டர்களை வைத்துக்கொண்டு எப்படிக் கட்சி நடத்த முடியும்?’

 • 4

  (பணம், சம்பளம் போன்றவற்றில் செய்யப்படும்) பிடித்தம்.

  ‘எனக்குப் பிடிப்பு போக சம்பளம் 8500 ரூபாய்’