தமிழ் பிணக்கு யின் அர்த்தம்

பிணக்கு

பெயர்ச்சொல்

  • 1

    உறவை அல்லது தொடர்பை முறிக்கும் வகையிலான தகராறு.

    ‘நெருங்கிய நண்பர்களான உங்களுக்குள்ளே பிணக்கா!’
    ‘பதவி வெறி கட்சிக்குள் பிணக்கையும் பகைமையையும் தோற்றுவித்துள்ளது’

  • 2

    (காதலர்கள் இடையே அல்லது கணவன் மனைவி இடையே கோபமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளும்) சிறு சண்டை; ஊடல்.