தமிழ் பிணைப்பு யின் அர்த்தம்

பிணைப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (நட்பால்) நெருக்கம்; (உறவு, அன்பு முதலியவற்றால் ஏற்படும்) நெருங்கிய தொடர்பு.

    ‘ஒரு நாள்கூடப் பிரிந்திருக்க முடியாதபடி அவனோடு ஒரு பிணைப்பு ஏற்பட்டுவிட்டது’
    ‘குடும்பப் பிணைப்பு’
    ‘பாசப் பிணைப்பு’