தமிழ் பின்குறிப்பு யின் அர்த்தம்

பின்குறிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    கடிதத்தில் கையெழுத்துக்குப் பிறகு குறிக்கப்படும் செய்தி; குறிப்பு.

    ‘பின்குறிப்பு என்று போட்டு ‘தம்பிக்கு 500 ரூபாய் கொடுத்துவிடு’ என்று எழுதிக் கடிதத்தை மடித்தான்’

  • 2

    (கட்டுரை, அறிக்கை போன்றவற்றின்) முடிவை அடுத்து இணைக்கப்படும் கூடுதல் தகவல்.

    ‘பின்குறிப்பாக இந்த விளக்கத்தைப் போட்டுவிடுங்கள் என்று ஒரு காகிதத்தைக் கொடுத்தார்’