தமிழ் பின்னணி யின் அர்த்தம்

பின்னணி

பெயர்ச்சொல்

 • 1

  (ஒரு காட்சி, புகைப்படம் போன்றவற்றில்) முக்கியமானதாக அமைவதற்குப் பின்புறத்தில் காணப்படுவது.

  ‘கோயில் கோபுரம் பின்னணியில் தெரியும்படி அவர் என்னைப் புகைப்படம் எடுத்தார்’

 • 2

  கதை முதலியவற்றில் பாத்திரங்கள் அல்லது மனிதர்கள் செயல்படும் தளம்.

  ‘இப்படிப்பட்ட சமூகப் பின்னணியில் குற்றங்கள் எழத்தான் செய்யும்’
  ‘இது சரித்திரப் பின்னணியை வைத்து எழுதப்பட்ட கதை’

 • 3

  ஒரு நிகழ்ச்சி நிகழ்வதற்கு வெளிப்படையாகத் தெரியாத தூண்டுதல் அல்லது காரணம்.

  ‘போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் ஒரு கூட்டமே இருக்கிறது’
  ‘அவரது திடீர்ப் பதவி விலகலுக்கு ஒரு பின்னணி இருக்கிறது’

 • 4

  (திரைப்படம், நாடகம் போன்றவற்றில்) காட்சிக்கு ஏற்றவாறு அதனுடன் சேர்ந்தோ பின்னாலிருந்தோ இசை, பாடல் போன்றவை ஒலிக்கும் முறை; நடிகரின் உதட்டசைவுக்கு ஒத்த விதத்தில் அவருக்குப் பதிலாக வேறொருவர் பேசும் அல்லது பாடும் முறை.

  ‘கதாநாயகன் இறக்கும் காட்சியின் பின்னணியில் வயலின் இசை ஒலிக்கிறது’
  ‘கன்னட நடிகருக்குத் தமிழ் தெரியாததால் பிரபல தமிழ் நடிகர் ஒருவர் அவருக்காகப் பின்னணி பேசியிருக்கிறார்’
  ‘பின்னணிக் குரல் கலைஞர்கள்’
  ‘அந்தப் படத்துக்குப் பின்னணி இசைதான் கூடுதல் பலம்’