தமிழ் பின்வாங்கு யின் அர்த்தம்

பின்வாங்கு

வினைச்சொல்பின்வாங்க, பின்வாங்கி

 • 1

  (தாக்குதலைச் சமாளிக்க அல்லது தவிர்க்க) மேற்கொண்டு முன்னே செல்லாமல் பின்னே செல்லுதல்.

  ‘இரண்டு மணி நேரச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகள் பின்வாங்கினர்’
  ‘கம்பை எடுத்ததும் நாய் பின்வாங்கியது’

 • 2

  (செய்வதாக ஒப்புக்கொண்ட ஒன்றிலிருந்து அல்லது ஒன்றைச் செய்யாமல்) விலகிக்கொள்ளுதல்.

  ‘வாக்குக் கொடுத்துவிட்டுப் பிறகு பின்வாங்குவதா?’
  ‘தரமற்றதை விமர்சிக்க எங்கள் பத்திரிகை என்றுமே பின்வாங்கியது இல்லை’