தமிழ் பிரகாசம் யின் அர்த்தம்

பிரகாசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பளிச்சென்ற வெளிச்சம்.

  ‘சூரிய ஒளியின் பிரகாசம் கண்களைக் கூசவைத்தது’
  உரு வழக்கு ‘முகத்தில் பிரகாசமே இல்லை’

 • 2

  மிகுந்த நம்பிக்கை தருவதாக இருப்பது.

  ‘இந்திய அணி இறுதிச் சுற்றுக்கு வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன’
  ‘உனக்குப் பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கிறது’