தமிழ் பிரம்பு யின் அர்த்தம்

பிரம்பு

பெயர்ச்சொல்

 • 1

  (கூடை, நாற்காலி முதலியவை பின்னப் பயன்படும்) நீர்நிலைகளின் ஓரங்களில் வளரும், எளிதில் வளையும் தன்மை உடைய தண்டைக் கொண்ட, கொடி வகையைச் சேர்ந்த தாவரம்.

  ‘பிரம்பு நாற்காலி’
  ‘பிரம்புத் தொட்டில்’

 • 2

  மேற்குறிப்பிட்ட தண்டிலிருந்து அளவாக வெட்டப்பட்ட குச்சி.

  ‘அந்தக் காலத்தில் ஆசிரியர் கையில் வைத்திருந்த பிரம்பைக் கண்டு மாணவர்கள் நடுங்கினார்கள்’