தமிழ் பிரமை யின் அர்த்தம்

பிரமை

பெயர்ச்சொல்

 • 1

  இல்லாதது இருப்பதுபோலவும் நிகழாதது நிகழ்வது போலவும் மனத்தில் ஏற்படும் தோற்றம் அல்லது உணர்வு.

  ‘கிணற்றுப் பக்கம் போகும்போதெல்லாம் கிணற்றுக்குள்ளிருந்து யாரோ தன்னைக் கூப்பிடுவது போன்ற பிரமை’
  ‘அம்மா காலமான பின்பும் அவள் வீட்டில் இருப்பதாகவே ஒரு பிரமை’

 • 2

  பொய்யான நம்பிக்கை; (உண்மையாக இல்லாமல் மிகைப்படுத்துவதால் ஏற்படும்) பொய்க் கவர்ச்சி.

  ‘இந்தக் கட்சி பதவிக்கு வந்தால்தான் நாட்டில் வறுமை ஒழியும் என்ற பிரமை மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது’
  ‘விளம்பரங்கள் உண்டாக்கும் பிரமையிலிருந்து விடுபட்டுப் பொருள்களின் உண்மையான தரத்தை அறிந்துகொள்ள வேண்டும்’