தமிழ் பிரயோகம் யின் அர்த்தம்

பிரயோகம்

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிட்ட விளைவு ஏற்படுவதற்காகச் சொற்கள், அதிகாரம், உத்தி போன்றவற்றை) பயன்படுத்துதல்.

  ‘பாரதியாரின் கண்ணன் பாட்டில் சொல் பிரயோகம் சிறப்பாக இருக்கும்’
  ‘‘ஓங்கி உலகளந்த’ என்ற பாசுரத்தில் ‘ஓங்கி’ என்ற பதத்துக்குப் பாடகர் கொடுத்த பிருகாக்களின் பிரயோகம் ரசிக்க வைத்தன’
  ‘தனது செல்வாக்கைப் பிரயோகம்செய்து அந்த வேலையை அவர் எனக்கு வாங்கித் தந்தார்’

 • 2

  (தாக்குதல், ஒடுக்குதல் போன்ற வழிமுறைகளை அல்லது ஆயுதங்களை) கையாளும் அல்லது மேற்கொள்ளும் செயல்.

  ‘ராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் இருவர் மாண்டனர்’
  ‘கூட்டத்தைக் கலைக்கக் காவலர் தடியடிப் பிரயோகம் நடத்தினர்’