பிற -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிற1பிற2

பிற1

வினைச்சொல்பிறக்க, பிறந்து

 • 1

  (குழந்தை) பெறுதல்/(ஆணோடு தொடர்புபடுத்திக் கூறும்போது) (குழந்தை) அடையப்பெறுதல்/(குழந்தை அல்லது விலங்குகளின் குட்டிகள் கருப்பையிலிருந்து) வெளிவருதல்.

  ‘என் மகளுக்குக் குழந்தை பிறந்திருக்கிறது’
  ‘தனக்குப் பெண் குழந்தை பிறந்த செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்’
  ‘நான் பிறந்த அன்று நல்ல மழையாம்’
  ‘புதிதாகப் பிறந்த அந்தப் பூனைக்குட்டியைப் பார்க்கும்போது மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது’

 • 2

  உண்டாதல்; தோன்றுதல்.

  ‘பிரச்சினைக்கு ஒரு தீர்வு பிறக்கும்’
  ‘மனம் அமைதி பெறும்போது மனத்தில் தெளிவும் பிறக்கும்’
  ‘வேலையை விரைவில் முடித்துவிட வேண்டும் என்று ஆர்வம் பிறந்தது’

 • 3

  (காலம், வருடம், மாதம் முதலியவை) தொடங்குதல்.

  ‘பிறக்கும் புத்தாண்டு உங்களுக்கு எல்லா நன்மைகளையும் தர வாழ்த்துகிறேன்’
  ‘மாதம் பிறந்துவிட்டது என்றால் ஆயிரம் செலவுகள் காத்திருக்கும்’

பிற -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிற1பிற2

பிற2

பெயர்ச்சொல்

 • 1

  (குறிப்பிடப்பட்டதைத் தவிர்த்த) மற்றவை; சிலது.

  ‘நான் கூறாத பிறவும் இப்பேட்டியில் சேர்க்கப்பட்டிருக்கின்றன’
  ‘அவர் சொல்லாத பிறவற்றை வாங்காதே’

 • 2

  (அடையாக வரும்போது) மேலும் இருக்கிற; மற்ற; ஏனைய.

  ‘கட்டுரையின் பிற பகுதிகளை இனிமேல்தான் தட்டச்சுசெய்ய வேண்டும்’
  ‘பிற மொழிகளையும் கற்க வேண்டும்’