தமிழ் பிள யின் அர்த்தம்

பிள

வினைச்சொல்பிளக்க, பிளந்து

 • 1

  (நிலம், பாறை, மரம் முதலியவை) பிரியும்படி துண்டாதல்/(பாறை, மரம் முதலியவற்றை) துண்டாக்குதல்.

  ‘பூகம்பத்தால் நிலம் பிளந்தது’
  ‘கோடாலியால் விறகைப் பிளந்தான்’
  உரு வழக்கு ‘மனத்தைப் பிளக்கும் சோகம்’
  உரு வழக்கு ‘தலைவலி மண்டையைப் பிளக்கிறது’

 • 2

  (வாய்) அகல விரிதல்/(வாயை) அகலமாக விரித்தல்.

  ‘தாய்ப் பறவையைக் கண்டதும் குஞ்சுகளின் வாய்கள் பிளந்தன’
  ‘வாயைப் பிளந்துகொண்டு வந்தது சுறா மீன்’

 • 3

  (ஒன்றாக உள்ள அமைப்பு முதலியவை) பிரிதல்/(ஒன்றாக உள்ள அமைப்பு முதலியவற்றை) பிரித்தல்.

  ‘கட்சி பிளந்துவிடும் அளவுக்குக் கோஷ்டிப் பூசல் பெருகிவிட்டது’
  ‘சங்கத்தைப் பிளக்க முயற்சிகள் நடக்கின்றன’

 • 4

  இயற்பியல்
  (அணுக் கருவைக் குறிப்பிட்ட முறையில்) உடைத்தல்; சிதைத்தல்.

  ‘அணுவைப் பிளக்கும்போது அதிக அளவில் ஆற்றல் வெளிப்படுகிறது’