தமிழ் பிள்ளை யின் அர்த்தம்

பிள்ளை

பெயர்ச்சொல்

 • 1

  (பொதுவாக) குழந்தை.

  ‘உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?’

 • 2

  மகனையோ இளைஞனையோ குறிக்கும் சொல்.

  ‘உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?’
  ‘பெரிய இடத்துப் பிள்ளைபோல் தெரிகிறது’

 • 3

  வட்டார வழக்கு பெண்; சிறுமி.

  ‘அந்தப் பிள்ளையைக் கூப்பிடு’

 • 4

  ‘குட்டி’, ‘குஞ்சு’ , ‘கன்று’ ஆகிய பொருளில் குறிப்பிட்ட சில விலங்குகள், பறவைகள், மரங்கள் ஆகியவற்றின் பெயர்களோடு இணைந்து வரும் சொல்.

  ‘அணில்பிள்ளை’
  ‘கிளிப்பிள்ளை’
  ‘தென்னம்பிள்ளை’