தமிழ் பிள்ளைப்பேறு யின் அர்த்தம்

பிள்ளைப்பேறு

பெயர்ச்சொல்

 • 1

  குழந்தை பெறும் பாக்கியம்.

  ‘நீண்ட காலம் பிள்ளைப்பேறு இல்லாமல் வருந்திய தம்பதியினர் கோயிலில் தங்கத் தொட்டில் கட்டுவதாக வேண்டிக்கொண்டனர்’

 • 2

  பிரசவம்.

  ‘என் மருமகள் பிள்ளைப்பேறுக்காகத் தாய் வீட்டுக்குப் போயிருக்கிறாள்’
  ‘பிள்ளைப்பேறுக்குப் பிறகு பெண்கள் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்’