தமிழ் பிழி யின் அர்த்தம்

பிழி

வினைச்சொல்பிழிய, பிழிந்து

 • 1

  (ஒன்றில் இருக்கும் நீர், சாறு ஆகியவை வெளியேறக் கையாலோ இயந்திரத்தாலோ) அழுத்துதல்; (திரவத்தைத் தன்னிடம் கொண்டிருக்கும் பொருளிலிருந்து அதை) முறுக்கி வெளியேற்றுதல்.

  ‘காயத்தின் மேல் பச்சிலையைப் பிழிந்தார்’
  ‘கரும்பு பிழியும் இயந்திரம்’
  ‘துண்டை நன்றாகப் பிழிந்து காயப்போடு’
  உரு வழக்கு ‘மனத்தைப் பிழியும் சோகம்’

 • 2

  (அச்சில் மாவு வைத்து அழுத்தி முறுக்கு முதலியவை) தயாரித்தல்.

  ‘ஜிலேபி பிழிய ஆள் வந்திருக்கிறார்’

 • 3

  கடுமையாக உழைக்கச் செய்தல்; சிரமப்பட வைத்தல்.

  ‘கொடுக்கும் அற்பச் சம்பளத்துக்கு இப்படிப் பிழிகிறார்களே என்று அலுத்துக்கொண்டார்’
  ‘சாலைப் பணியாளர்களைப் பிழிந்தெடுக்கிறார்கள்’