பிழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிழை1பிழை2

பிழை1

வினைச்சொல்பிழைக்க, பிழைத்து

 • 1

  வாழ்க்கை நடத்துதல்.

  ‘பிச்சையெடுத்துப் பிழைப்பது கேவலமாக இல்லையா?’
  ‘எத்தனை நாள் இப்படிக் கடன் வாங்கிப் பிழைக்க முடியும்?’

 • 2

  (ஆபத்திலிருந்து) தப்பிப்பிழைத்தல்; உயிர் பிழைத்தல்.

  ‘இந்த நோயிலிருந்து அவர் பிழைத்ததே அதிசயம்!’
  ‘அப்பா பிழைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று மருத்துவர் கூறினார்’

 • 3

  (ஆட்சி கவிழ்க்கப்படாமல்) தப்பித்துக்கொள்ளுதல்.

  ‘இந்த முறை அமைச்சரவை பிழைக்குமா?’

பிழை -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

பிழை1பிழை2

பிழை2

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தவறு.

  ‘நூலின் ஒரு பக்கத்தில் இவ்வளவு பிழைகளா?’

 • 2

  குற்றம்; குறை.

  ‘என் பேச்சில் பிழையிருந்தால் மன்னிக்கவும்’

 • 3

  இலங்கைத் தமிழ் வழக்கு தவறு; தப்பு.

  ‘உன்னில் பிழையை வைத்துக்கொண்டு மற்றவர்களைக் குறைசொல்லாதே’
  ‘நீ அவரிடம் நடந்துகொண்ட விதம் பிழை’
  ‘மருந்துக்கடைக்காரர் பிழையான மருந்துகளைத் தந்துவிட்டார்’